Saturday, February 26, 2011

வணக்கம்.


அன்புடையீர், வணக்கம்.

நமது குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடுமபத்தின் அனைத்து படைப்பாளிகளையும் இணையதளத்தில் அறிமுகம் செய்யும் நோக்கத்துடன், எனது வலைத்தளங்களில் அவர்களது படைப்புகளைப் பிரசுரித்து வருகிறேன். இதற்கு ஒத்துழைப்பு நல்கிவரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.

உங்கள் படைப்புகளை அலைபேசியில் எனக்கு அனுப்பும்போது, தெளிவாக டைப் செய்தும், உங்கள் பெயர், ஊர் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட்டும் அனுப்பவேண்டுகிறேன்.

உங்கள் படைப்புகளை இணையத்தில் வெளியிட்டபின், உங்களுக்கு நான் தகவல் அறிவித்ததும், தவறாமல் இணயதளத்தில் உங்கள் படைப்புகளைக் கண்டு மகிழுங்கள்.

ஓர் அழகான குழந்தையைப் பெற்றெடுக்கும் அன்னையானவள், முதன்முதலாக அதன் முகத்தைக் கண்டு பூரித்து மகிழும் உணர்வை நீங்கள் பெறலாமே!

உங்கள் படைப்புகளை வாசித்து மகிழும் உலகளாவிய வாசகர்களின் பின்னூட்டத்தை அவ்வப்போது நமது வலைத்தளங்களில் பதிவிட்டு, உங்கள் பார்வைக்கு வைக்கும் பணியிலும் உற்சாகமாய் ஒருகிறேன்.

எனது கவிதைத்தளங்களை அலங்கரிக்க படைப்புகளை அளித்துவரும் உங்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றி, என்றென்றும்!

அன்புடன்,

கிரிஜா மணாளன்

குறுஞ்செய்திக் கவிதைகள்!


குறுஞ்செய்திக் கவிதைகள்!=====================

பெருவிரல்களுக்குள் உறவுகள்
விருட்சமாய்
நவீனயுக விதைகளாய் கைப்பேசியில்
குறுஞ்செய்திக் கவிதைகள்!

- கவிஞர் கு. லட்சுமணன், புதுப்பட்டினம்
(தமிழ்நாடு)




விலைமகளிர்!
------------

பல மொழிகள் அறிந்திருக்கிறாள்
மொழிப்பற்றினால் அல்ல!
'தொழிலுக்காக'!
வாய்பேச வாய்ப்ப்பில்லா தருணமதில்
தாய்மொழியே 'முனகல்'தானே!

- கவிஞர் சுமதி, சேலம்
(தமிழ்நாடு)


அம்மணமாய்.....
---------------

அரசு உதவிகள் கையூட்டு
ஆடை அணிந்துகொள்ள
உதவிகேட்பவர்கள்
அம்மணமாய் அணிவகுப்பு!

- கவிஞர் கயாத் பாஷா, சென்னை
(தமிழ்நாடு)



தனம்!
=====
எல்லோருக்கும் உயிரூட்டும் தனம்
கல்லாய்க் கிடக்கிறது ஸ்விஸ் வங்கியில்
இந்தியச் செல்வம்!

- கவிஞர் முருகா, திருப்பூர்
(தமிழ்நாடு)

Thursday, February 24, 2011



தலைகுனிந்தே.......
==================

நிமிர்ந்து நடக்க ஆசைப்பட்டும்,
முடியவில்லை.......மனிதர்கள்
உமிழ்ந்துவிட்டுப் போகும்
எச்சில்களும்
மிருகங்களின் கழிவுகளினாலும்
தலைகுனிந்தே நடக்கிறேன் நான்...
பாரதியின் சொல்லை
சற்றே மறந்து!

- எஸ். சுமதி, சேலம்
(தமிழ்நாடு)

Sunday, February 20, 2011

காதல் ஓவியம் -------------

காதல் ஓவியம்
-------------

தூரிகையின்றி வரைந்தோம்
நம் கண்களால்,
முழுமை அடைந்தது
காதல் ஓவியம்.

- எஸ். சுமதி, சேலம்
(தமிழ்நாடு)

Monday, February 14, 2011

கன்னக்குழி!


கன்னக்குழி!
சிட்டிகை அளவு
மண்கொண்டு நிரப்பிவிடும்
சின்னக்குழிகள் என்றாலும்,
சட்’டென விழவைத்துவிட்டது என்னை
உன் கன்னக்குழி!

- தனபால், ராசிபுரம் (தமிழ்நாடு)

Wednesday, February 9, 2011

நம்பிக்கை!


நம்பிக்கை!

தவமியற்றுகின்றன
சிப்பிகளுக்குள் உயிர்கள்
முத்தாகும் நம்பிக்கையில்.

- மீனாதேவி, நாகர்கோவில்
(தமிழ்நாடு)

திருட்டு!


திருட்டு!

இமைப்பொழுதில் என்
இதயம் திருடியவளே! - நான்
இமைக்காது பார்க்கையில்
எப்படி திருடினாய்?

- முத்து விஜயன், கல்பாக்கம்.
(தமிழ்நாடு)

மழை!

முப்போகம் விளைய உதவிய
முதலாளியாய் அன்று....
கான்கிரீட் வீடுகளை
கழுவிச் சுத்தப்படுத்தும்
சேவகனாய் இன்று!

- க. இளையராஜா, சாத்துக்கூடல், (தமிழ்நாடு)

இதழ்கள்!

இதழ்கள்!

நுரைத்துப் பொங்கும் பாலை
உதடு குவித்து ஊதி
உஷ்ணம் குறைத்து
தேனீர் சமைத்து பகிர்ந்தாய்.
உன் இதழ்கள் சுவைத்த
திருப்தி எனக்கு!
- சாரா (சரவணன்) சென்னை-99
(தமிழ்நாடு)