Monday, January 31, 2011

ரோஜா!


ரோஜா!

அவள் கிள்ளிப்பார்த்த ரோஜாவால்
வலிகொண்ட செடி
அழத்தெரியாமல்
பூவாய் அரும்பத்தொடங்கியது
மற்றொரு கிளையொன்றில்.

- தியாகு, வாயலூர். தமிழ்நாடு.

கனவுகள்!

புதுவீட்டில் முதல் உறக்கம்
வர மறுத்து
வாசலிலேயே நிற்கின்றன
பழையவீட்டு பற்றிய
கனவுகள்.

- ராசை. கண்மணி ராசா இராசபாளையம் (தமிழ்நாடு)

Saturday, January 29, 2011

புதிய கவிஞர்களின் படைப்புகளும்.......

அன்புடையீர், வணக்கம்.

இதுவரை நமது அலைபேசி குறுஞ்செய்திக் கவிஞர்கள் 50 க்கு மேற்பட்டோரின் கவிதைகள் இந்த வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இப்போது நம்மிடையே அறிமுகமாகியுள்ள பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நான் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதால், படைப்பினை ரசிப்போர் இக்கவிதைகளுக்கான உங்கள் விமரிசனங்களை இடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

வாசகர்கள் அளிக்கும் ஊக்கம் படைப்பாளர்களின் கவிதையாற்றலை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நன்றி!
அன்புடன்,

கிரிஜா மணாளன்
(எடிட்டர்)

Saturday, January 22, 2011

காதணி விழா!

காதணி விழா!
காலம் காலமாய் நிகழ்கிறது
அழுகையை அடக்கும் முயற்சிகள்
இனிப்புத் திணிப்பில்
இனிதே முடியும்
காதணி விழாக்கள்!

- கு. லட்சுமணன், புதுப்பட்டினம்,
(தமிழ்நாடு)

தீவிரவாதம்!

தீவிரவாதம்!
அடிக்கடி தோண்டியெடுக்காததால்
அடிக்கடி துளிர்த்துக்கொண்டுதான் இருக்கும்
மதத்தீவிரவாதம்.....
ஆணிவேரில் அமிலம் ஊற்றும்
தலைமுறை தழைக்கும்வரை!

- ஹயத் பாஷா,
சென்னை-81 (தமிழ்நாடு)

மரத்தின் கண்ணீர்!


மரத்தின் கண்ணீர்!
நீயில்லாமல் நான் வாழமுடியும்
நான் இல்லாமல் நீ.......?
- குலுங்கிக் குலுங்கி அழுகிறது மரம்.
நீ வெட்டும்போதும்
உனக்காக!

- மு.வேலா. கல்லக்குடி (டால்மியாபுரம்)
திருச்சி (தமிழ்நாடு)

பரிசு!


பரிசு!

பந்தயக்குதிரைக்குப் பணம் கட்டி
வாழ்க்கையின் ஓட்டத்தில் பின்தங்கி
வறுமையையே பரிசாக வெல்கிறான்
சூதாட்டக்காரன்.

- தியாகு, வாயலூர், (தமிழ்நாடு)