Wednesday, November 10, 2010

காந்தியம்



>காந்தியம்


பண்டிகைக் காலங்களில் மட்டுமே
நீயும் கதரும்
நினைவுக்கு வருகிறீர்கள்..
நீ மேல்சட்டையை
ஏழைகளின் நிலைகண்டு வருந்தி
துறந்தாய்,
இன்று...மேலாடைகள்,
விளம்பரத்துக்காகவும்
கவர்ச்சி அணிவகுப்புக்காகவுமே
களையப்படுகின்றன!
கொலையும், கொள்ளையும்
தலைவிரித்தாடுகின்றன!
'காந்தியம்' பேசிய உதடுகள்
இன்று
'கோட்சேயிஸம்" பேசுகின்றன!



கவிதாயினி சுமதி
சேலம், (தமிழ்நாடு)

Thursday, September 30, 2010

எங்கள் மனங்கனிந்த நன்றி!

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!
நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.தமிழ்நாடு.


எங்கள் அழைப்பிற்கிணங்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து இதழாசிரியர்களுக்கும், பல மாவட்டங்களிலிருந்து வருகை சிறப்பித்த கவிஞர்களுக்கும், கவிதை ஆர்வலர்களுக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றி!

- கிரிஜா மணாளன்

Tuesday, September 7, 2010

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு மற்றும் ஆண்டுவிழா!

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!

நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.
தமிழ்நாடு.

நிகழ்ச்சிகள்:

குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்
கவியரங்கம்
திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.
இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -
கலந்துரையாடல்
மற்றும்
நகைச்சுவை விருந்து.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


- கிரிஜா மணாளன்

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!

நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.தமிழ்நாடு.

நிகழ்ச்சிகள்:

குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்

கவியரங்கம்

திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.

இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -

கலந்துரையாடல்

மற்றும்
நகைச்சுவை விருந்து.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


- கிரிஜா மணாளன்

Sunday, August 15, 2010

நன்றி!

நன்றி!
======

அன்புடையீர், வணக்கம்.

கடந்த 01.08.2010. அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நிகழ்ந்த "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி"யில் பங்கேற்ற கவிஞர்களுக்கும், திரளாகக் கலந்துகொண்ட ஆர்வலர்களுக்கும் எனது அன்புகலந்த நன்றி!

அடுத்து செப்டம்பர் 12 அன்று தமிழ்நாடு திருச்சி மாநகரில் நிகழவிருக்கும் "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி" யின் முதலாமாண்டு நிறைவுவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

திருச்சி ஈ.வெ.ரா பெரியார்க் கல்லூரி முதுகலை மாணவர் திரு. அருள் முருகன் அவர்கள் ஆய்வு செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு கல்வித்துறையிடம் சமர்ப்பித் துள்ள "குறுஞ்செய்திக் கவிஞர்களைப்பற்றிய ஆய்வு, நூல் வடிவில் இவ்விழாவில் வெளியிடப்பட விருக்கிறது.

விழா பற்றிய நிகழ்ச்சி நிரல் விரைவில் இவ்வலைத்தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும்.

- கிரிஜாமணாளன்
Editor,
www.smapoets-tamil.blogspot.com
www.smskavignarkal-world.blogspot.com

Monday, August 2, 2010

குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 3 வது சந்திப்பு விழா

குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 3 வது சந்திப்பு விழா
நாள் : 01.08.2010 ஞாயிறு

இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர்,
ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு.

நேரம்: காலை 09.30 முதல் மாலை 6 மணி வரை.

நிகழ்ச்சிகள்:

காலை 9.30 வரவேற்பு
காலை 9.45 கவிஞர்கள் அறிமுகமும், கவிச்சரமும்.
காலை 11 மணி கவிஞர் பா. ஜெயக்குமார் அவர்களின் "செவ்வானமும், சிறு தூரலும்" கவிதைநூல் வெளியீடு
மதியம் 1.00 விருந்து
மதியம் 2 முதல் மாலை 6 வரை "கலந்துரையாடல்" - பல்சுவை நிகழ்ச்சிகள்.

அனைவரும் வருக!

அன்புடன்,

குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப உறுப்பினர்கள்.



"குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி"

அன்பு நண்பர்களுக்கு,
ஜூன் 20 அன்று செஞ்சி நகரில் நிகழவிருந்த "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி" எதிர்பாராத சில காரணங்களால் நிறுத்தப்பட்டு,, அச்சந்திப்பு வரும் ஆகஸ்ட் 1, 2010 அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடத்தப்பட்விருக்கிறது என்பதை அறிவித்துக்கொள்கிறோம்.

- கிரிஜா மணாளன்
எடிட்டர்.

Thursday, May 27, 2010

நமது மூன்றாவது " குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப நிகழ்ச்சி!

அன்புடையீர்,
வணக்கம். 20.06.2010 ஞாயிறன்று தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி நகரில் நிகழவிருக்கும் நமது மூன்றாவது " குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு" அனைவரும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல் மற்றும் விவரங்கள் விரைவில் இத்தளத்தில் வெளியாகும்.


- கிரிஜா மணாளன்
எடிட்டர்.

Monday, February 15, 2010

வெற்றிகரமாக நிகழ்ந்த " குறுஞ்செய்தி கவிஞர்கள்/இதழாளர்களின் 2 வது சந்திப்பு" விழா!

14.02.2010 ஞாயிறன்று, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் நிகழ்ந்த இச்சந்திப்பில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து வந்த 40 குறுஞ்செய்தி கவிஞர்களும், இதழாசிரியர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பிற்கு தலைமையேற்ற கவிஞர் தஞ்சாவூர்க் கவிராயர், சிறப்புரையாற்றிய திரு சுந்தர்ஜி ஆகியோருக்கு எங்கள் விழாக்குழுவின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

குறுஞ்செய்தி கவிஞர்களைப்பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டுள்ள திருச்சி பெரியார் கல்லூரி முதுகலை மாணவர் கவிஞர் அருள்முருகன் தனது ஆய்வைப்பற்றிய விவரங்களை அனைவருக்கும் விளக்கினார்.
பெரியார் கல்லூரி - பாரதிதாசன் பலகலைக்கழகம் வாயிலாக தமிழ்நாடு கல்வித்துறையிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இவரது ஆய்வு குறித்து அனைவரும் பாராட்டினர்.

காலையிலிருந்து மாலை வரை நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பற்றிய தொகுப்பும், புகைப்படங்களும் விரைவில் இந்த வலைத்தளத்தில் இடம்பெறும்.


- கிரிஜா மணாளன்
(செயலர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்/திருச்சி மாவட்டக்கிளை)

Tuesday, February 9, 2010

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) கவிஞர்கள்/இதழாசிரியர்களின் "இரண்டாவது சந்திப்புவிழா"

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) கவிஞர்கள்/இதழாசிரியர்களின் "இரண்டாவது சந்திப்புவிழா".நாள்: 14.02.2010 (ஞாயிறு)
நிகழ்விடம்: கலைமகள் மெட்ரிக் பள்ளி, பங்களா தெரு, செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) தமிழ்நாடு.
காலம்: காலை 9.00 லிருந்து மாலை 5.00 வரை.
தமிழகத்தின் அனைத்து குறுஞ்செய்தியாளர்களும் கலந்துகொள்ளும் இவ்விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

- கிரிஜா மணாளன்

Thursday, January 21, 2010

அன்புடன் அழைக்கிறோம்!

'எஸ்.எம்.எஸ். கவிஞர்கள்/இதழாசிரியர்கள்' இரண்டாவது சந்திப்பு.==================================================
அன்புடையீர், வணக்கம்.
கடந்த 2009, செப்.13ல் திருச்சி மாநகரில் நடந்த 'எஸ்.எம்.எஸ். கவிஞர்கள்/இதழாசிரியர்கள்' சந்திப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இரண்டாவது சந்திப்பு தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பிப்ரவரி 14 அன்று நிகழவிருக்கிறது.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து எஸ்.எம்.எஸ். கவிஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் விரைவில் இத்தளத்தில் வெளியிடப்படும்.

அன்புள்ள,
கிரிஜா மணாளன்