Wednesday, March 30, 2016

முந்தியெழு!

(உலகத்தாய்மொழி  நாளன்று, திருச்சியில்  நிகழ்ந்த பைந்தமிழ் இயக்கவிழாவில், வழங்கப்பட்ட கவிதை)

வண்டமிழை ஏற்றிருந்தாய்,
வளஞ்சிறக்க வாழ்ந்திருந்தாய்...
கண்டவர்பின்  சென்றதனால்
காலிடறி  வீழ்ந்திட்டாய்!
களம்காண  முந்தியெழு!
கால்கோளை  இன்று நடு!

கொஞ்சுதமிழ்  உண்டிருந்தாய்
குறள்நெறியைக்  கொண்டிருந்தாய்,
வஞ்சகரால்  வாழ்விழந்து
வழிமாறிச்  செல்கின்றாய்!
வலையறுக்க  முந்தியெழு!
வளவாழ்வைப்  பந்தலிடு!

மாத்தமிழைக்  கற்றிருந்தாய்,
மனைமாட்சி  பெற்றிருந்தாய்.
தீத்திறத்தார்  கூட்டுறவால்
திருவிழந்தே  உருவிழந்தாய்!
தேரோட்ட  முந்தியெழு!
தெருவெல்லாம்  கோலமிடு!

முத்தமிழைக்  கொண்டிருந்தாய்,
முனைமுகத்தில்  நின்றிருந்தாய்,
வித்தென்று  சோடைகளை
விதைத்தின்று  கவல்கின்றாய்!
விதைவிதைக்க  முந்தியெழு!
விளைநிலத்தைச்  செப்பனிடு!

- கவிஞர்  கொட்டப்பட்டு  சக்திவேலன்
திருச்சி
==============================

Friday, March 25, 2016


உலக மகளிர் தினத்தை   மகிழ்வுடன்   கொண்டாடும்   அனைத்துலக   மகளிருக்கும், எங்கள்   தமிழ்நாடு  அலைபேசிக்  குறுஞ்செய்திக்  கவிதைக்   குழும’  (Mobile  SMS  Poets  of Tamilnadu) த்தின்   கவிஞர்கள்  சார்பில்  எனது  நல்வாழ்த்துக்கள்!
                ‘’மங்கையராய்ப்  பிறப்பதற்கே  நல்ல  மாதவம்  செய்திட  வேண்டுமம்மா!”  என்று மகளிர் குலத்தைப்  போற்றிய  அந்த  மகாகவியின்  எண்ணப்படி,  அகில  உலகிலும்  தங்களை அனைத்துத்  துறைகளிலும்  நிலைநிறுத்திக்கொண்டு   சிறப்பினைப்  பெற்றுவரும்  மகளிர்தம் சிறப்பைப்  போற்றும்  வண்ணம்  எங்கள்  அலைபேசிக்  குறுஞ்செய்திக் கவிஞர்களும், பிற  கவிஞர்களும்    உருவாக்கிய   சில   கவிதைகளை   இங்கே   உங்கள்   பார்வைக்கு   வைக்கிறேன்.

- கிரிஜா   மணாளன் 
 =========================================================
 முதலில்  பாவேந்தரின்   கவிநயம்  பருகுவோம்.
 


உலக  அமைப்புக்கு  இலேசு  வழி 

இவ்வுலகில்  அமைதியினை  நிலைநாட்ட  வேண்டில்
இலேசுவழி  ஒன்றுண்டு  பெண்களை  ஆடவர்கள்
எவ்வகையும்   தாழ்த்துவதை  விட்டொழிக்க   வேண்டும்
தாய்மையினை  இழிந்துரைக்கும்  நூலுமொரு  நூலா?
செவ்வையுற   மகளிர்க்கு க்  கல்விநலம்  தேடல்
செயற்பால  யாவினுமே  முதன்மையெனக்  கொண்டே
அவ்வகையே  செயல்வேண்டும் அறிவுமனை  யாளால்
அமைதியுல  குண்டாகும்  என்ன இதில்   ஐயம்

- பாவேந்தர்   பாரதிதாசனார்
('குடும்பவிளக்கு'   நூலில்)
===================================================================

பெண்ணுரிமை   பேண்!
===================
மறுக்காமல்    பெண்ணுரிமை   மாநிலத்தார்   தந்தால்
சறுக்காமல்   இவ்வையம்   செல்லும்  வெறுக்காமல்
பெண்ணினத்தைப்  போற்றிப்   புரந்திட்டால்   பொன்னுலகம்
கண்ணியமாய்   வாழும்   களித்து.  

- புலவர்   மு.  செல்வராசு,   திருச்சிதமிழ்நாடு
=============================================


Thursday, March 17, 2016


Saturday, March 12, 2016


   

மகளிர்தினம்
(2016)
கவிதைகள்இணையதளக்  கவிஞர்கள்
மற்றும், கைப்பேசிகுறுஞ்செய்திக்
(SMS)
கவிஞர்களின்
படைப்புகள்.

    
      
      

வலிகளே உனது வலிமை!
=======================
வலிகளே உனது வலிமை - பெண்ணே
வருந்தாதே இது உனது உடைமை!
வானுறை தெய்வத்தின் மேலாய் - பெண்ணை
வாழ்த்துகின்ற காரணத்தினாலே!            

கன்னிப்  பருவமதை எய்திடும்போதும்
காதலுடன் காளையவனைக் கூடும்போதும்
பத்துமாதப் பந்தமொன்றைப் பெறும்போதும்
பாலையுண்ணும் சிசுமார்பி  லுதைக்கும்போதும்   
வலிகளே  உனது வலிமை!

உற்றார்   உறவினர்  உயர்வுக்கும்
உனைச்சார்ந்த உறவுகளின் மேன்மைக்கும்
உள்ளமிரங்கி நீ யாற்றூம் பணிகள்தன்னில்
உடல்வருத்தி யுழைப்பதினால் தோன்றுகிற
வலிகளே  உனது வலிமை!
               
ஏற்றம்பிடித்து  நீரை நீ இறைக்கும்போதும்
நாற்றாங்காலில் நடவதனைச் செய்யுபோதும்
விளையும் பயிர் வீடுவந்து சேரும்வரை
வெயில்பனி உளைச்சலினால் விளைகின்ற
வலிகளே உனது வலிமை!

வலியின் விளைவு வசந்தமெனில் - அந்த
வசந்தத்தின்  வரவு நிலைக்குமெனில்
வலிகளே  உனது  உடன்பிறப்பு - அதை
வரவேற்பதே  உனது தனிச்சிறப்பு!

- தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி.
தமிழ்நாடு           


---------------------------------------------------------------------------------------------------------
தன்னம்பிக்கை கொள்!
-----------------------------------------
கண்ணீர் விட்டது போதும்,
கண்களைத் துடைத்திடு பெண்ணே!
உன் பாதம் போகும் வழி மறந்து,
நல்பாதை போகும் வழி தேடு!
இலையுதிர் காலம்தான் இது உனக்கு,
அதற்காக
இழந்துவிடாதே நம்பிக்கையை!
சமுதாயமேசகாராவானாலும்,
உன் நம்பிக்கை ஒரு நைல்நதி ஊற்று!
வசந்தகாலம் வெகுதொலைவில் இல்லை!
வரப்போகும் காலம் உன்
வாழ்க்கையின் வசந்தம்!
தளர்ச்சி கொள்ளாதே,
தன்னம்பிக்கை நீ கொண்டால்,
சுற்றும் பூமியையும்
சற்று நிறுத்தலாம்!
 - முனைவர் ஜோதி கார்த்திக்,
         திருச்சி

=============================================================
வேண்டுமோ   தனியொரு  தினம்?

மண்கலம்  சுமந்தகாலம்  போய்
விண்கலம்  ஏறும்  காலம்!
அடுப்படியில்  வெந்தகாலம்  போய்
அரியாசனம்  அமரும்  காலம்!
இடுப்பொடிய  வேலைசெய்த  காலம்  போய்
இடைமெலிய  'ஜிம்' நாடும்  காலம்!
கழனியில்  உழன்ற  காலம்  போய்
கணினியில்  களித்திடும்  காலம்!
மொத்தத்தில். . . . . . . .
வையகமே  பூவையரின்  தனம்!
வேண்டுமோ  தனியொரு  தினம்?

- "வஞ்சி", நெல்லைதமிழ்நாடு
 ===========================================================================

எக்காலம்?

ஆண்டுதோறும்   மகளிர்தினம்
கொண்டாடியும்
அகம்  நிறையவில்லை   எங்களுக்கு.
வேண்டுவன  கேட்டும் கிடைக்கவில்லை,
எங்கள்
வேதனையை யாருமிங்கே
மதிப்பதில்லை!
யோசிக்கும்  நிலையில் ஆள்வோர் இருக்க,
நாங்கள்
யாசிக்கும் நிலை மாறுவது
எக்காலம்?

கிரிஜா   நந்தகோபால், திருச்சி
    (தமிழ்நாடு)  
==================================================
பொறுமை கொள்!

பெண்ணுரிமைஎன்பதெல்லாம்
பேச்சளவில்  இருப்பதால்
முன்னுரிமை பெற்றிடவே
முயல்கிறோம்முடியவில்லை!
மண்ணுக்குள்  புதையும்முன்நாம்
மனம் மகிழும் நாள்வரும்!
பெண்ணே!    நீ பொறுமை கொள்!
பெற்றிடுவோம்  சமவுரிமை!

 -எஸ்.  வளர்மதி, ஈரோடு, , தமிழ்நாடு


=========================================================
இவர்களும்.....

இன்னமும்  இருக்கிறார்கள்
எத்தனையோ  தெரசாக்களும்சாவ்லாக்களும்
நம்  வீட்டு  சமையலறையில்.

-. கோபிநாத், சேலம், தமிழ்நாடு.
 ================================================

மகளிர்  தினம்
நேற்றுவரை  பேசிக்கொள்ளாத
பக்கத்துவீட்டுப்  பெண்மணிகள்
சிநேகமாய்  கைகுலுக்கிக்கொண்டபர்
மகளிர்  தினவிழாவில்!
#              #              #              #              #              #              #             
மகளிர்தினவிழாக்  கொண்டாட்டத்தில்
மறந்தேபோனது  அவர்களுக்கு
அலைபேசியில்  அழைக்கிறார்கள்
கணவனை  வண்டியோடு  வரச்சொல்லி!
#              #              #              #              #              #              #
- தனலட்சுமி   பாஸ்கரன், திருச்சிதமிழ்நாடு
 =================================================
அடிமை!

யாருக்குக்  கேட்கும்
என்  இதயத்தின்  நாதம்?
எப்போது  உருகிப்பாடும்
என்  சுதந்திர  கீதம்?
எனக்குள்  செய்கிறேன்
புதுமைப்  பெண்ணென்ற  விவாதம்,
நான்  அடிமை  என்பதுதான்
எனது  வாழ்வின்  வேதமோ?
அதுவன்றி  விதியின்  சாபமோ?

தே  ரம்யாகொட்டக்குளம்,   தமிழ்நாடு
=======================================
ஒதுக்கீடு!

ஒதுக்கீடு  கேட்டு  ஓயாமல்  போராடியும்
ஒதுக்கப்பட  வேண்டியவை  எங்களுக்கு
ஒதுக்கப்படவில்லை.....ஆனால்......
ஒன்றுமே  போராடாமல்
ஒதுக்கிவிடுகிறார்கள்  எங்கள்  மாமியார்கள்
எங்களையே.......
அவர்கள்  இதயத்திலிருந்து!
               
- சிகலைவாணி, வேலூர், (தமிழ்நாடு)   
=========================================================================

பெண்ணே   நீ.........

பெண்ணே! உனக்கு  எதிரி
மாமியாருமில்லை - போலி
சாமியாருமில்லை!
நீ, நீயேதா  ன்!
உன்னைப்  பிணைத்திருப்பது
இரும்பு  விலங்கல்ல,
சின்னநூல்தான்!
தொலைக்காட்சி   ஊடகத்தின்
போலி  சோகங்களில்  உன்
நிஜமுகத்தைத்  தொலைக்காதே!
உன் கழுத்து
தங்கநகைக்காக  மட்டுமல்ல,
தங்கமெடல்களுக்காகவும்தான்!
 
 - முத்து  விஜயன், கல்பாக்கம், சென்னை(தமிழ்நாடு)

============================================================ 

அடிமைப்   பெண்கள்
------------------------------------
பால்யத்  திருமணமும்
பாலியல்  குற்றங்களும்  குறைந்தும்,
நீங்கிடவில்லை  இன்னும்
பெண்ணடிமைக்  கொடுமை!
நாகரிகப்  போர்வையில்,
அங்கங்களைப்  படமெடுத்து
ஆதாயச்சந்தையில்  விற்கத்துணியும்
விஞ்ஞான  விபரீத  உலகமிதில்...
பெண்ணுரிமை  பேசி
புதுமையாய்வாழும்  ஆண்களிடம்
அடிபணிந்தே  இருக்கிறார்கள்,
அடிமையாய்  இருக்கும்
பெண்கள்!

ஹயத்  பாட்சா (JKK SMS Editor) சென்னை
 =================================================================

பெண்மைக்காவலர்   வள்ளுவர்!

கற்புநெறி  பெண்ணுக்கும்  காளையர்க்கும்
பொதுவென்று  பாரதிஓர்  விதியைச்செய்தான்!
அற்புதமாய்  இக்கருத்தை  அன்றே   ஏற்று
ஆண்களுக்கும்  வள்ளுவன்  நல்லொழுக்கம்  சொன்னான்

ஈன்றவளின்  பெருமைகளை  வகுத்துச்சொன்னான்'
இல்லாளின்  சிறப்புகளைப்  பெருக்கித்   தந்தான்!
சான்றோர்போல் பொறுமையினைக்  கூட்டச்சொன்னான்'
சாக்கடையாம்  அழுக்காற்றைக்  கழிக்கச்  சொன்னான்!

வாய்மைக்கும்  தூய்மைக்கும்  வரவேற்புப்   பா
வாசித்த  வள்ளுவனின்  பின்னால்  சென்றால்
பூமிக்குத்  துயரேதுபொய்யா  வாக்கின்
பொருளுணர்ந்து  ஏற்பவர்க்கு  சிக்கல்  ஏது?

\


       
   - வல்லம்  தாஜுபால்   (தஞ்சைதாமு)

=======================================================
விலைப்பொருளாய்.....

வாழ்க்கைத்தரம்  உயர்வு
பெண்களுக்கு,
வரதட்சிணையின்  நிறமென்னவோ
இன்னும்  கவர்ச்சியாக!
ஆண்களைமட்டும்  இன்னும்
ஓர்விலைப்  பொருளாய்
அங்கீகரித்துள்ளதே
இச்சமுதாயம்!

- எஸ்சுமதி, சேலம் (தமிழ்நாடு)
=======================================================

எங்கே  புரியப்போகிறது?.........

எட்டாவதுதானே  படிக்கிறாய்
என்று சொல்லும்  அம்மாவிற்கும்
 இரட்டைச்  சடைப்பின்னல்
நல்லாயில்லே  எனும்  அண்ணனுக்கும்
ஏன், கூனி  நடக்கிறாய்...நிமிர்ந்துநட
எனக்கூறும்  அத்தைக்கும் 
 சின்னப்பிள்ளையை ஏன்  விரைவில்
பெரியவளாக்குகிறாய்  என்று
 கடிந்துகொள்ளும்  அப்பாவிற்கும்
  தினசரிசாப்பாட்டிற்கே  தடுமாறும்
 என்குடும்ப  வறுமைக்கும்
  எங்கே  புரியப்போகிறது?.........
  எதிர்படும்  வாலிபக்  கண்களைத்
 தவிர்க்க  நான்  பாடுபடும்
 என்  மார்பக  வளர்ச்சி!

- "விஷ்வாஸ்" (வசந்தி  மெய்யப்பன்) ராசிபுரம், தமிழ்நாடு
=================================================

பெண்கள்!

பானைபிடித்துச்  சோறாக்கிப்
பசிதீர்த்த  பெண்கள்
வீணையெடுத்து  இசைமீட்டி
இன்பம்சேர்த்த  பெண்கள்

பாசம்காட்டிப்  பரம்பரையைப்
பாதுகாத்த  பெண்கள்
சேலைகட்டி  சிலைபோலக்
காட்சிதந்த  பெண்கள்

தலைவாரி  மலர்ச்சூடி
தலைதாழ்த்தி  நடந்திட்ட  பெண்கள்
கல்லானாலும்  கணவன்  என்று
காலம்  கழித்த  பெண்கள்

விஞ்ஞான  முன்னேற்றத்தால்
வேறாகிப்போனார்கள்  இன்று!

ஜீன்ஸோடும்  பேண்டோடும்
சீரழியும்  பெண்கள்
சிற்றின்ப  வாழ்வுதனில்
சிறைப்பட்ட  பெண்கள்
அரிதாரம்  பூசிக்கொண்டு
அலைகின்ற  பெண்கள்
அடக்கம்தான்  என்ன  விலையென
கேட்கின்ற  பெண்கள்!

பொறந்தவீடா? புகுந்தவீடா?
பட்டிமன்றமேவேண்டாம்!
தனிக்குடித்தனத்தில
 தத்தளிக்கும்  பெ
கழனித்தொட்டியும்  கறவைமாடும்
கனவில்கூட  இனி  சாத்தியமில்லை!
கணினியோடும்  வலைத்தளத்தோடும்
 காட்சிதரும்  கலியுக  சரஸ்வதிகள
இயற்கையை  நசுக்கி
 செயற்கையாய்  வாழும்  ரோபோக்கள்!

- இராமும்தாஜ்  பேகம், திருச்சி
================================================
மகளிர்  தினம்!
============
பெண்மைக்கு  நினைவுகூறும்  மார்ச்எட்டை
பெருமையுடன்  போற்றுகின்றோம்  மகளிர்நாளாய்!
பெற்றோமே  போராடிப்  பெண்சுதந்திரத்தை  இன்னும்
பெண்ணடிமைக்  கொடுமை  ஏனோ  ஓயவில்லை!

ஆண்மைக்கு  நிகரென  பெண்ணின்ச  மத்துவத்தைப்
பேசிவிட்டுப்  போனவர்கள்  உண்டேயானால்  மண்ணில்
பெண்ணுக்கு  அறிவோடு  கல்வியும்  தேவைஅதைத்
தந்தால்  சமுதாயத்தில்  சமத்துவம்தான்!

பெண்பல  மேன்மைகள்  பெற்றிடினும்  அவள்
பேச்சோடும்  எழுத்தோடும்  நிற்கின்றாள்என
எண்ணிடும்  ஆண்கள்பேதை  என்றார்
அவர்தம்  பேதமைமாறிட  வேண்டாமோ?

வள்ளுவன்  பாரதி கண்ட காவியப் பெண்ணே!
புதுமைப் பெண்ணாய் மலர்ந்திடுவாய்!
போதும்  இந்த அடிமைத்தீயில் எரிந்தது
சுதந்திரக் காற்றை சுவாசிப்பாய்!

கிபுஷ்பாஞ்சலிஅரியலூர், தமிழ்நாடு.
=============================================

மகளிர்க்கான   விழிப்புணர்வு   வாசகங்கள்
===================================
தன்னம்பிக்கைதான்  வெற்றிப்பாதையின் முதல் படிக்கட்டு.
கடுமையான  உழைப்பே, வெற்றியின் ரகசியம்.
வீழ்வது  வெட்கமல்ல, வீழ்ந்துகிடப்பதுதான்  வெட்கம்!
உன்  சிந்தனையே  உன்னை  நிலைநிறுத்தும்  தூண்!
வணங்கத்  துவங்கும்போதே, வளரத்  துவங்குகிறாய்!
மிகப்பெரிய  சாதனைகள்  சாதிக்கப்படுவது  வலிமையால்  அல்ல, விடாமுயற்சியால்!
முன்னேற்றம்  என்பது, இன்றைய  செயலாக்கம், நாளைய  உறுதிநிலை!
உயர்ந்த  விஷயங்களை  எளிமையாகக்  கூறுவதே  சான்றாண்மை!
சிறந்த  வாழ்வின்  தலையாய  அணிகலன்  அடக்கமும், பணிவும்மட்டுமே!
கடமையைச்  செய்யமுற்படும்போதுதான், நம்  தகுதியை  அறியமுடியும்!பெண்களுக்கான   முதல்   வாக்குரிமை
==================================
                உலகநாடுகள் அளவில்பெண்களுக்கான  வாக்குரிமையை  முதன்முதலில்  வழங்கியது அமெரிக்கா  என்றாலும், தேசீயஅளவில்  வழங்காமல்  கீழ்க்கண்ட  பகுதிகளுக்குமட்டுமே  குறிப்பிட்டுள்ள  ஆண்டுகளில்  வழங்கியது.

வ்யோமிங்                          - 1869                      கொலரொடோ - 1894
உட்டா                                  - 1895                      இடாஹோ         - 1896


பெண்களுக்கான   வாக்குரிமையை  முதன்முதலில்  வழங்கிய  பிறநாடுகள்

நியூசிலாந்து                                                                       - 1893
ஆஸ்திரேலியா                                                                 - 1902
பின்லாந்து                                                                          - 1906
நார்வே                                                                                 - 1913
டென்மார்க், ஐஸ்லாந்து                                                - 1915
நெதர்லாந்து. சோவியத்                                                - 1917
பிரிட்டன், ஆஸ்திரியா, கனடா, ஜெர்மனி.
போலந்து.                                                                           - 1918
செகோலோவோஸ்கியா                                              - 1920
--------------------------------------------------------------------------------------------------------------

முதல்   பெண்    பிரதமர்கள்
====================
சிரிமாவோ பண்டாரநாயகா       (இலங்கை)                                         1960 - 65
இந்திராகாந்தி                                   (இந்தியா)                                           1966 - 67, 80 - 84.
கோல்டாமேயர்                                (இஸ்ரேல்)                                         1969 - 74
எலிஸபெத்  டொமிட்டின்           (மத்தியஆப்ரிக்ககுடியரசு)              1975
மார்கரெட்  தாட்சர்                          (இங்கிலாந்து)                                   1979 - 90
மெரியா - டி -லூர்டன்                    (போர்ச்சுகல்)                                     1979
மேரி  எயுஜெனியா                         (டொமினிகா)                                    1980 - 93
க்ரோஹார்லம்                                  (நார்வே)                                              1981, 86 - 89
கோரஸன்  அர்கியூனோ                 (பிலிப்பைன்ஸ்)                                1986 -92
அதிபர்கள்

மெரியாஎஸ்லில்லா                       (அர்ஜென்டைனா)                          1974 - 76
விஜ்டிஸ்ஃபின்  ஃபோகடோடிர்  (ஐஸ்லாந்து)                                     1980 - 96
========================================================