Monday, February 15, 2010

வெற்றிகரமாக நிகழ்ந்த " குறுஞ்செய்தி கவிஞர்கள்/இதழாளர்களின் 2 வது சந்திப்பு" விழா!

14.02.2010 ஞாயிறன்று, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் நிகழ்ந்த இச்சந்திப்பில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து வந்த 40 குறுஞ்செய்தி கவிஞர்களும், இதழாசிரியர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பிற்கு தலைமையேற்ற கவிஞர் தஞ்சாவூர்க் கவிராயர், சிறப்புரையாற்றிய திரு சுந்தர்ஜி ஆகியோருக்கு எங்கள் விழாக்குழுவின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

குறுஞ்செய்தி கவிஞர்களைப்பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டுள்ள திருச்சி பெரியார் கல்லூரி முதுகலை மாணவர் கவிஞர் அருள்முருகன் தனது ஆய்வைப்பற்றிய விவரங்களை அனைவருக்கும் விளக்கினார்.
பெரியார் கல்லூரி - பாரதிதாசன் பலகலைக்கழகம் வாயிலாக தமிழ்நாடு கல்வித்துறையிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இவரது ஆய்வு குறித்து அனைவரும் பாராட்டினர்.

காலையிலிருந்து மாலை வரை நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பற்றிய தொகுப்பும், புகைப்படங்களும் விரைவில் இந்த வலைத்தளத்தில் இடம்பெறும்.


- கிரிஜா மணாளன்
(செயலர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்/திருச்சி மாவட்டக்கிளை)

Tuesday, February 9, 2010

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) கவிஞர்கள்/இதழாசிரியர்களின் "இரண்டாவது சந்திப்புவிழா"

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) கவிஞர்கள்/இதழாசிரியர்களின் "இரண்டாவது சந்திப்புவிழா".நாள்: 14.02.2010 (ஞாயிறு)
நிகழ்விடம்: கலைமகள் மெட்ரிக் பள்ளி, பங்களா தெரு, செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) தமிழ்நாடு.
காலம்: காலை 9.00 லிருந்து மாலை 5.00 வரை.
தமிழகத்தின் அனைத்து குறுஞ்செய்தியாளர்களும் கலந்துகொள்ளும் இவ்விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

- கிரிஜா மணாளன்