Wednesday, June 22, 2016

தஞ்சை மண்ணில், ஒரத்தநாட்டில் பிறந்த கவிஞர் புகாரி அவர்கள் எனது நீண்டகால நண்பர். அரபு நாட்டில் பணியாற்றி, தற்போது கனடாவில் கணினி வல்லுநராகப் பணி. 'அன்புடன்' என்னும் புகழ்பெற்ற இணைய தளத்தை நடத்திவரும் இவரால் இணையதள படைப்பாளராக உருவாகிய எண்ணற்ற படைப்பாளர்களில் நானும் ஒருவன்.
            'வெளிச்ச அழைப்புகள்', 'அன்புடன் இதயம்', சரணமென்றேன்','பச்சை மிளகாய் இளவரசி' மற்றும் 'காதலிக்கிறேன் உன்னை எப்போதும்...' ஆகியவை இவரது கவிதைத் தொகுதிகள்.
            தன் புதிய நூலை வெளியிடும்போது அதை தமிழகத்திற்கு வந்து வெளியிடும் வழக்கத்தைக் கொண்டுள்ள இவரின் தாய்நாட்டுப் பற்றை போற்றாதவரே இல்லை!
            நான் செயலாளராக உள்ள எங்கள் 'உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளையின் சார்பில் இவருக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் எண்ணற்ற இணையதள படைப்பாளர் தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது எங்களால் மறக்கவியலாது!

- கிரிஜா மணாளன்       

கண்ணீரில்  விழுந்த  இதயம்!

நெஞ்சு நிறைய
கண்ணீரைக் கொட்டிவிட்டுச்
சென்றுவிட்டாய்!
மூச்சுவிட முடியாமல்
மூழ்கிக் கிடக்கிறது  இதயம்.

நீரில் விழும் எல்லாமும்
எடை இழக்கும் என்பார்கள்
உன் கண்ணீரில் விழுந்த
என் இதயம் மட்டுமே
கனமாய்க் கனக்கிறது!
==============================================
நீயே என் காதலி!

உன்
உள்ளத்தைத் தொடவரும்
ஒவ்வொரு  முறையுமே
உன்
பாதங்களைத்  தொடமுடியாத
பாவப்பட்ட அலைகளாய்
நான் திருப்பி  அனுப்பப்படுகிறேன்
எனினும்
என் காதலை  நிராகரிக்கும்
நீயே என் காதலி!
=============================================
- கவிஞர்  புகாரி, கனடா
('காதலிக்கிறேன் உன்னை எப்போதும்...' தொகுப்பில்)Tuesday, June 21, 2016Monday, June 20, 2016Friday, June 17, 2016தந்தை சொல்....
=========================
      'தந்தைசொல் மிக்க
      மந்திரமில்லை' என்பதை
      நிந்தனை செய்யும்
      நேசமிக்க இளைஞர்களே!
      பந்தமும் பாசமும்
      பரவிநிற்கும்
      அவ்வுறவை
      வந்தனை செய்வதே உங்கள்
      வாழ்விற்கு முன்னேற்றம்!

                     = கிரிஜா மணாளன்உலகத் தந்தையர் தினம் - 2016

உன்
பெயரின் முதலெழுத்துக்குச் சொந்தக்காரர்!
பெற்றோர் என்பதன்
தலைப்புக்காரர்!
குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு!
குறையிலாப் பாசத்தின் பிரதிபலிப்பு!
அன்னைக்குச் சமமாய் அன்புகாட்டி
உன்னை வளர்ப்பதில் வழிகாட்டி!
ஆலோசனை அளிப்பதில் ராஜதந்திரி!
குடும்ப
ஆட்சியில் அவரே முதல் மந்திரி!
அப்பா என்னும் உச்சரிப்பில்
அகவுகின்றது அவரின் பாசப்பிணைப்பு!

தந்தை மகற்காற்றும் நன்றியென
தமிழ்க்கவி வள்ளுவன் உரைத்ததுபோல்,
சிந்தையில் உன்னை என்றும் நிறுத்தி
சீரான வாழ்வளிக்கும் வள்ளல் அவர்!

தந்தைசொல் மிக்க மந்திரம் ஏது?
தவறாமல் அதனை ஏற்றால்
தலைநிமிரும் உன் வாழ்வு!

== தந்தையைப் போற்றுவோம்!==

- செல்வி ஜெபமாலை மரியண்ணன்

                                          காஞ்சிபுரம், தமிழ்நாடு

Thursday, June 9, 2016

                  இன்று (ஜூன், 9) பிறந்தநாள் காணும்
                      நெய்வேலி நகர், நண்பர்
                     தீபக் ராஜா அவர்களுக்கு
                     நமது மனங்கனிந்த
                        நல்வாழ்த்துக்கள்!
         
                     தமிழ்நாடு குறுஞ்செய்திக் குழுமத்தில் ஒன்றி,                      நாள்தோறும் நல்ல படைப்புகளை வழங்கிவரும்                          அவர் இலக்கியப் பணி ஓங்குக!
                     அவரது படைப்புகளில் ஒன்று::
    
                           கட்டிடக்கலை  கற்காதவன்
                               கண்கவர்  வீடு அமைத்தான்...
                               குளவிக்கூடு!
                               வாழ்த்துக்களுடன் .......  கிரிஜா மணாளன்

Email: girijamanaalanhumour@gmail.com