Friday, February 12, 2016

காதலர் தின ஜோக்ஸ்

காதலர்  தின  ஜோக்ஸ்

" உனக்கு  இந்த  லவ்வர்ஸ்டே  பிரசன்டேஷனை   நாலு   மாசம்   முந்தியே வாங்கி வச்சுட்டேன்  டார்லிங்!"

'ஓஹோ..  ஆடித் தள்ளுபடிலயே   வாங்கிட்டீங்களோ?'


- ஈரோடு  எஸ். வளர்மதி
 =============================================================

1.

காதலன் : வீட்டுக்குத்  தெரியாமத்தானே  பீச்சுக்கு  வந்தே  டியர்?

காதலி : ஆமாம், .....மம்மியும்,  டாடியும்,  அவங்க  லவ்வர்ஸோட கொண்டாட  போயிட்டாங்க!

2
  
"அடுத்த  லவ்வர்ஸ்  டேக்கு  இன்னும்  காஸ்ட்லியா   பிரசண்ட்  பண்றேன்   டார்லிங்!"

"ஹும்,  அந்த  விஜய்யும் இப்படித்தான்  புளுகிட்டுப்  போறான்!

3.

"இன்னும்   எத்தனை   வருஷத்துக்கு இப்படியே  லவ்வர்ஸாவே இருக்கப்போறோமோ......"

"என்   மேரேஜ்வரை ....இல்லேன்னாஉங்க  மேரேஜ்வரை!"

4.

"நீ என்னை லவ்  பண்றதுக்கு, எனக்கு என்ன தகுதி இருக்குன்னுதான் தெரியலே  டார்லிங்!"

"ம்.......ஆதார்  கார்டு வச்சிருக்கீங்கள்ள்ல!"5.

என்ன இந்த நடுராத்திரில  வந்து  பார்ட்டி  அரேஞ்ச்  பண்றீங்க?"

"உஸ்ஸ்ஸ்ஸ். ….....நாங்க  'கள்ளக்காதலர்கள் 'சார்!

 6.

"உன் காதலுக்காக என்  உயிரையே கொடுப்பேன்டியர்!"

"அவசியமில்லே!............நம்ம  லவ்,  என்  அப்பாக்கு தெரிஞ்சா,   அவரே  எடுத்துடுவாரு!"

7.

"போன  வருஷத்தைவிட,  இந்த  லவ்வர்ஸ்டே நமக்கு  டெவலப்  ஆகியிருக்குல்ல  டியர்?"

"ஹும், ..........பார்ட்டி  பில்லும்,  கிஃப்ட்  மதிப்பும்  டெவலப்   ஆகலையே!"

 - கிரிஜா   மணாளன்காதல் வசனங்கள்

காதல்   வசனங்கள்

"உன்  உடலில், உன்  மனதில்,
உன்  நினைவில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்ஆனால்யாருமில்லாதபோதுஉனக்காகநான்  இருப்பேன்!"

"தெரியாதகாற்றும்புரியாதகவிதையும்சொல்லாதகாதலும்கலையாதகனவும்பிரியாதநட்பும்என்றுமேஅழகுதான்!"

"என்னைநேசித்தேன்வாழ்க்கைபிடித்ததுஉன்னை  நேசித்தேன்வாழப்பிடித்ததுநான்வாழ்கிறேன்உன்அன்போடு!"

"கண்ணில் சில  நீர்த்துளிகள். இதயத்தில்  சிலகாயங்கள்வாழ்வில்  சில  சோகங்கல்அனைத்தையும்  மறக்கிறேன்....நீங்கள்  என்னுடன்  பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும்!"

"உன் கண்கள் விழிக்கும்போதெல்லாம்நான்  உன்  எதிரில் இல்லாமலிருக்கலாம்ஆனால்உன் இதயம் துடிக்கும் போதெல்லாம்உன்  நினைவுக்குள்தான்  நான்  இருப்பேன்!"

- எஸ்.வளர்மதிஈரோடு.
தமிழ்நாடு
============================================================


காதல் பொன்மொழிகள்

காதல்  பொன்மொழிகள்
============================================================================
கண்ணீரோடு  கலக்கும்போதுதான், காதலின்  அழகு அதிகரிக்கிறது.
                                                                                               
                                                            - சர்வால்டர்  சீகாட்


பெண்களை  உயர்த்தி  வைத்து, அவர்களுக்கு சக்தியும் பலனும் அளிக்கும் காதல் ஏனோ ஆண்களை பலவீனப்படுத்திவிடுகிறது.

                                                            - மாப்பஸான்

காதல் என்பது இளம் உள்ளத்தில் வீசும் தென்றல் ; அந்தக் காற்றுவீசும் காலத்தில் அறிவு, ஆணவம்தர்க்கம்  ஆகியவற்றுக்கு  இடமில்லை.

                                                            - புருனோ லெஸ்ரிங்

உண்மை, காதல் இவை இரண்டும் உலகில் மிகப் பெரிய சக்திகள்.   இவை இரண்டும் ஒன்று சேர்ந்துவிடுமானால்,   அவற்றை எதிர்ப்பது கடினம்!

                                                            - கட்வொர்த்

வாலிபர்களிடம் தோன்றும் காதலின்  முதல்  அறிகுறி. கோழைத்தனம்பெண்களிடம் அந்த அறிகுறி துணிச்சல்இந்த  கோழைத்தனமும்துணிச்சலும்  ஒன்றையொன்று  நெருங்கும்  தன்மையுடையன.
                                                            - ரைஸ்டெவிங்

மற்றொருவரின்  சுகத்தில்  நம்முடைய சுகத்தை அர்ப்பணிப்பதே காதலிப்பதாகும்!
                                                           
                                                                        - லீப்நிட்ஜ்

காதலிக்கும்போது, உனக்கு  காதலைப்பற்றி எவ்வளவு குறைவாகத் தெரிகிறதோஅவ்வளவிற்கு காதலில் இன்பம்!
                                                                        - நிக்காலியர்

இரு நபர்களை ஒருவருடத்தில் காதலிப்பது மகத்தான செயல் அல்ல
இருபது வருடங்களாக ஒரே நபரைக் காதலித்து வாழ்வதுதான் மகத்தான செயல்!

                                                                        - ஃப்ளாரன்ஸ் மாலி

=============================================================
காதலர் தினம் - 2016  
கவிதைகள்

தனித்து  வாழ்ந்தது  சோதனை
(கா)தலித்து  வாழ்வதே  சாதனை!
---------------------------------------------------
ஒருதலையாய்க்  காதலித்து
இன்று
இருதலைக்கொள்ளி  எறும்பாக  ஆனாலும்,
என்றும்  கடிக்காத  காதலராய்
கல்யாணத்துக்குப்  பின்னும்
வாழ்கிறோமே........
காதலிக்கு  ஜே!

---------------------------------------------------------
அன்று
பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ்க என்றனர்
பெரியோர்,
இன்று,
பதினாலும்  பெற்று
காதலோடு வாழ் என்கிறான்
சிறியோன்!
-----------------------------------------------------

கரையோரப்   படகு
காதலர்களுக்குப்   பாதுகாப்பாகுமா?
கயவர்களின்  பார்வையில்
காதலைத் தொலைக்காதீர்கள்!

- ராம்கோபால், மதுரை, தமிழ்நாடு
============================
============================

உன்விழிப் பார்வையில் எரியும்என்னை
அணைப்பாயோ
அள்ளிப் பூசிக்கொள்வாயோ
காதலோடு!
-----------------------------------------------------------
எனக்காக  வாழ்ந்த நாட்களைவிட,
உனக்காகக் காத்திருந்த
காலங்களேஅதிகம்!

- பத்மாவதி  கிருஷ்ணசாமி, நன்னிலம், தமிழ்நாடு
----------------------------------------------------------------------
========================================

காதலில்  மூழ்கியவனின் கைப்பேசி
எப்போதும்  திறப்பில்...
கடனில்  மூழ்கியவனின் கைப்பேசி
எப்போதும் அணைப்பில்!
---------------------------------------------------------------------------
மேதினியில்  மேன்மை பெறும்
மேம்பட்ட காதல் வளர,
சாதியென்னும் களைகள் நீக்கி,
சாகுபடி செய்வீர் அகம் மலர!

- கவி வினோத்
குற்றாலம், தமிழ்நாடு
 =================================
==================================
அழகைப்  பார்த்து  வந்தகாதல்
நிலைக்கவில்லை  திருமணத்திற்குப்  பின்,
அண்ணனுக் கு,
குணத்தைப்  பார்த்துவந்த  காதலை
கொண்டாடுகிறான்  தம்பி
காதலர்தினத்தை,
பேரன் பேத்திகள்  வந்தபின்னும்!

- டி, கங்கை  கணேசன்மதுரை. தமிழ்நாடு
=====================================
=====================================

காதலர்களுக்குத் தேவை
ஒழுக்கம்!
ஒழுக்கத்தில் பிறப்பதே
உன்னதக் காதல்!

- கே.எஸ்.சசிகுமார், விருதுநகர், தமிழ்நாடு
====================================
====================================

காதல்   வெள்ளத்தில்
சிக்கிக்கொண்டேன்
தயவுசெய்து  யாரும்
காப்பாற்ற  வேண்டாம்
அவளைத்  தவிர!
அவள்  குறுந்தகவல் எனக்கு
உணவுப்  பொட்டலம்
அவளது முகநூல்  எனக்கு
தண்ணீர் பாட்டில்
அவளது  பார்வை என்னைக்
கரை  சேர்க்கும்  படகு!

- வீ.உதயகுமாரன். வீரன்வயல், தமிழ்நாடு
=================================
================================

ஆயுள்தண்டனையை மட்டுமே  விரும்பி
இதயச் சிறையில் அடைபடும்
உண்மையான  காதல்!
------------------------------------------------------------
என்  இதயத்தில் தவழ்கிறது
உன்  காதல்பார்வை1
என் இதயத்தைத்  தழுவுகிறது 
உன் காதல்புன்னகை!
--------------------------------------------------------------------

உன்   பார்வை
காதல்  க டிதம்  எழுதியது.
உன்  புன்னகை
காதலின்   முகவரியை   எழுதியது!

-------------------------------------------------------------------

வெறிச்சோடிக்  கிடக்கும் மனசுகளை
நிரப்பித்தான் விடுகிறது
காதலைப்பற்றிய  இன்பங்கள்,
அல்லது
துன்பங்கள்!


-முத்துஆனந்த்வேலூர், தமிழ்நாடு.

=================================
=================================
கரைமேல்  எழுதப்பட்ட  உன்  பெயரை
எடுத்துச் சென்று
கடலின்  அடியாழத்தில்
பத்திரப் படுத்திவிட்டுத்
திரும்புகிறது  அலை!

- பாடலாசிரியர்    வசந்தராஜா, தமிழ்நாடு.
==================================
=================================

என்  மனம்  காதலின்  சமாதி,
அதில்  உன்  நினைவுகள்
புன்னகை  புரியும்  ஜோதி!

=====================================
காதல்  நினைவுகளை
முட்களால்  சொறிந்தபடி
கடற்கரை  மணலில்
புதைந்து  கிடக்கிறது
மக்கிய  படகொன்று!
=====================================
பூட்டிய  என் நிசப்த பொழுதுகளைத்
திறக்கும்  சாவி
உனது புன்னகை!
வளையல் சப்தம்!
கொலுசு   சப்தம்!

- வைரநகர்  சிவாஜி, புஷ்பவனம்,
தமிழ்நாடு.
======================================
=====================================
கடும்  வெயிலும்  உறைக்கவில்லை...
கடற்கரை  காதல்!

- கூ..  ராஅம்மாசியப்பன்சேலம்.
தமிழ்நாடு.


====================================