Friday, October 23, 2009
Thursday, September 17, 2009
Wednesday, September 16, 2009
Wednesday, September 9, 2009
Wednesday, August 26, 2009
திருச்சி மாநகரில்...."குறுஞ்செய்தி இதழாளர்கள்/கவிஞர்கள் சந்திப்பு - (SMS Journals Editors & Poets Meet - 2009)

ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!
===============================
“குறுஞ்செய்தி இதழாளர்கள் (SMS இதழாசிரியர்கள்) மற்றும் படைப்பாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி” வருகிற 13.09.2009 ஞாயிறுஅன்று, திருச்சி மாநகரத்தில் நிகழவிருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள “குறுஞ்செய்தி இதழாளர்கள்/ படைப்பாளர்கள்” (SMS journal editors & poets) அனைவரும் இதில் கலந்துகொண்டு, ஏனைய படைப்பாளர்கள்/இதழாளர்களைச் சந்தித்து மகிழவும், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் இது ஓர் அரிய வாய்ப்பாக அமையுமென்று நம்புகிறோம்.
நிகழ்ச்சி: 13.09.2009 (ஞாயிறு) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை.
நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்: காஜாமியான் மேனிலைப் பள்ளி, (தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் எதிர்புறம்) மன்னார்புரம், திருச்சி 620020.
ஹைக்கூ தொகுப்பு வெளியீடு: நமது கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் அடங்கிய தொகுப்பு அன்றைய சந்திப்பின்போது வெளியிடப்படவிருக்கிறது. குறுஞ்செய்தி இதழாசிரியர்களும், அவ்விதழ்களைச் சார்ந்த கவிஞர்களும் தங்களது படைப்புகளை SMS மூலம் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
மற்றும் விவரங்கள் விரைவில் இணையதளத்திலும், அலைபேசி குறுந்தகவல் வாயிலா கவும் அனைவருக்கும் அறிவிக்கப்படும்.
அழைப்பிதழ் பெறும் நண்பர்கள் அனைவரும் தங்கள் வருகையைப் பதிவுசெய்து எங்களது ஏற்பாடுகளுக்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
ஒருங்கிணப்பாளர்கள் :
கிரிஜா மணாளன்
அலைபேசி: 9952422383)
அ. கௌதமன்
அலைபேசி: 9994368626)
(திருச்சி மாவட்டக் கிளை / உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)
Tuesday, August 25, 2009
தமிழகத்தின் முதல் "குறுஞ்செய்தி இதழாளர்"
Sunday, August 23, 2009
வலி!
Wednesday, August 12, 2009
Monday, July 27, 2009
SMS இதழாசிரியர்கள் அறிமுகம் தொடர்கிறது!
அடுத்து இத்தளத்தில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் SMS இதழாசிரியர்கள்:
1. திரு. கன்னிக்கோவில் ராஜா, சென்னை. (Editor, KKR SMS Ithazh)
2. திரு. ராஜிவ் காந்தி, செய்யாறு. (Editor, RAGA SMS Ithazh.)
3. திரு. வாலிதாசன், முகவை. (Editor, VAALIDHASAN SMS Ithazh)
4. திரு. க. அண்ணாமலை, மாமண்டூர். (Editor, SUNDAR SMS Ithazh)
5. திரு. ஜனனி அந்தோணிராஜ், திருச்சி. (Editor, PARAVASAM SMS Ithazh)
6. திரு. எம். செல்வதுரை, ஓசூர். (Editor, UDHAYAM SMS Ithazh)
இளங்கவிஞர்களை ஊக்குவிக்கும் இவர்களையும் இணையத்தில் அறிமுகம் செய்து மகிழவேண்டும் என்ற எனது இம்முயற்சிக்கு ஆதரவுதரும் அனைவருக்கும் எனது நன்றி.
- கிரிஜா மணாளன்
(Editor)
1. திரு. கன்னிக்கோவில் ராஜா, சென்னை. (Editor, KKR SMS Ithazh)
2. திரு. ராஜிவ் காந்தி, செய்யாறு. (Editor, RAGA SMS Ithazh.)
3. திரு. வாலிதாசன், முகவை. (Editor, VAALIDHASAN SMS Ithazh)
4. திரு. க. அண்ணாமலை, மாமண்டூர். (Editor, SUNDAR SMS Ithazh)
5. திரு. ஜனனி அந்தோணிராஜ், திருச்சி. (Editor, PARAVASAM SMS Ithazh)
6. திரு. எம். செல்வதுரை, ஓசூர். (Editor, UDHAYAM SMS Ithazh)
இளங்கவிஞர்களை ஊக்குவிக்கும் இவர்களையும் இணையத்தில் அறிமுகம் செய்து மகிழவேண்டும் என்ற எனது இம்முயற்சிக்கு ஆதரவுதரும் அனைவருக்கும் எனது நன்றி.
- கிரிஜா மணாளன்
(Editor)
Monday, July 20, 2009
SMS இதழாசிரியர் அறிமுகம் - 1

இதழின் பெயர்: “ LINGAM SMS ”
இதழாசிரியர்: க. ராமலிங்கம், சிறுவந்தாடு, விழுப்புரம் மாவட்டம்.
அலைபேசி எண்கள் : 9940771501, 9976227703
மின்னஞ்சல் முகவரி: lingamsms@yahoo.com
தொடர்பு முகவரி:: கோமளா சில்க்ஸ், சிறுவந்தாடு,
விழுப்புரம் மாவட்டம் PIN : 605105.
இதழில் வெளியிடப்படுவது :
வாசகர்களின் கவிதைகள், ஹைக்கூ - திங்கள் முதல் வெள்ளி வரை.
குறுங்கதை - சனி, ஞாயிறு.
இதழின் தனிச்சிறப்பு : தமிழகத்தில் முதல் முதலாக எஸ்.எம்.எஸ்.(SMS) மூலமாக குறுங்கதை அனுப்புவதை அறிமுகம் செய்து, இதுவரை 24 கதைகளை அனுப்பியுள்ள இதழ்.
ஒரு குறுங்கதையில் 131 எழுத்துக்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், இதழின் Logo 18 எழுத்துக்கள், எழுத்தாளரின் பெயர் மற்றும் அலைபேசி எண் இவைகள் 11 எழுத்துக்கள், ஆக, மொத்தம் 160 எழுத்துக்களில் வெளியிடப்படுகிறது)
படைப்பாற்றல் மிக்க இவ்விதழின் ஆசிரியர் திரு. ராமலிங்கம், சிற்றிதழ்களில் இதுவரை 9 கவிதைகள், ஒரு சிறுகதை, 5 கட்டுரை இவைகளை எழுதி வாசகர்களுக்கு அறிமுகமானவர். மேலும் இணையதளத்தில், www.smskavignarkal-world.blogspot.com கவிதைத் தளத்தில் (தளத்தின் ஆசிரியர்: கிரிஜா மணாளன்) 3 சிறப்பான கவிதைகளை வழங்கி, உலகளாவிய வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
நண்பர் ராமலிங்கம் அவர்களின் இப்பணி மேன்மேலும் சிறப்புற நிகழ்ந்து, அவர் மூலம் நமது தமிழுலகத்துக்கு புதிய படைப்பாளர்களின் வருகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புடன், அவருக்கும், இப்பணியில் அவரை ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
கிரிஜா மணாளன்
(Editor: www.smspoets-tamil.blogspot.com)
மற்றும்.....
www.smskavignarkal-world.blogspot.com
www.tiruchikavignarkal.tamilblogs.com
www.kavithaigal.tamilblogs.com
www.girijamanaalan-humour.blogspot.com
www.girijanandha-humour.blogspot.com
www.humour-garden.blogspot.com
Tuesday, July 14, 2009
வாழ்க உன் புகழ்!
சூடு!
சூடு பட்டுத் திருந்தியது
சலவை செய்த
துணி.
- எம். செல்வதுரை (9488387886)
ஓசூர், தமிழ்நாடு.
(நன்றி: Lingam SMS ithazh)
சலவை செய்த
துணி.
- எம். செல்வதுரை (9488387886)
ஓசூர், தமிழ்நாடு.
(நன்றி: Lingam SMS ithazh)
அம்மா!
அரிசிப் பானைக்குள்
சில்லறைச் சத்தம்...
அம்மாவின் ஞாபகம்.
- முருகேஷ் (9444360421)
(நன்றி: Validhasan SMS idhazh)
சில்லறைச் சத்தம்...
அம்மாவின் ஞாபகம்.
- முருகேஷ் (9444360421)
(நன்றி: Validhasan SMS idhazh)
Sunday, July 12, 2009
இளமையில் கல்!
ஏழ்மை!
Saturday, July 11, 2009
வறுமை!
Thursday, July 9, 2009
வணக்கம்!

அன்பார்ந்த இணையதள வாசகர்களுக்கு,
நாள்தோறும் அலைபேசி (Mobile Phone) குறுந்தகவல் வழியாக தமது கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் கவிஞர்களை ஊக்குவிக்கத் துவக்கப்பட்ட கவிதைத்தளம் இது.
எனது மற்றொரு தளமான www.smskavignarkal-world.blogspot.com தளத்தில் இதுவரை 100க்கும் மேலான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அதுபோன்று, இத்தளத்திலும் கவிஞர்களின் கவிதைகள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், நேர்காணல் ஆகியவை இடம்பெறும்.
வாசகர்கள் உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பின்னூட்டம் (Comments) அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
- கிரிஜா மணாளன்.
Subscribe to:
Posts (Atom)