Friday, March 25, 2016

உலக மகளிர் தினத்தை   மகிழ்வுடன்   கொண்டாடும்   அனைத்துலக   மகளிருக்கும், எங்கள்   தமிழ்நாடு  அலைபேசிக்  குறுஞ்செய்திக்  கவிதைக்   குழும’  (Mobile  SMS  Poets  of Tamilnadu) த்தின்   கவிஞர்கள்  சார்பில்  எனது  நல்வாழ்த்துக்கள்!
                ‘’மங்கையராய்ப்  பிறப்பதற்கே  நல்ல  மாதவம்  செய்திட  வேண்டுமம்மா!”  என்று மகளிர் குலத்தைப்  போற்றிய  அந்த  மகாகவியின்  எண்ணப்படி,  அகில  உலகிலும்  தங்களை அனைத்துத்  துறைகளிலும்  நிலைநிறுத்திக்கொண்டு   சிறப்பினைப்  பெற்றுவரும்  மகளிர்தம் சிறப்பைப்  போற்றும்  வண்ணம்  எங்கள்  அலைபேசிக்  குறுஞ்செய்திக் கவிஞர்களும், பிற  கவிஞர்களும்    உருவாக்கிய   சில   கவிதைகளை   இங்கே   உங்கள்   பார்வைக்கு   வைக்கிறேன்.

- கிரிஜா   மணாளன் 
 =========================================================
 முதலில்  பாவேந்தரின்   கவிநயம்  பருகுவோம்.








 


உலக  அமைப்புக்கு  இலேசு  வழி 

இவ்வுலகில்  அமைதியினை  நிலைநாட்ட  வேண்டில்
இலேசுவழி  ஒன்றுண்டு  பெண்களை  ஆடவர்கள்
எவ்வகையும்   தாழ்த்துவதை  விட்டொழிக்க   வேண்டும்
தாய்மையினை  இழிந்துரைக்கும்  நூலுமொரு  நூலா?
செவ்வையுற   மகளிர்க்கு க்  கல்விநலம்  தேடல்
செயற்பால  யாவினுமே  முதன்மையெனக்  கொண்டே
அவ்வகையே  செயல்வேண்டும் அறிவுமனை  யாளால்
அமைதியுல  குண்டாகும்  என்ன இதில்   ஐயம்

- பாவேந்தர்   பாரதிதாசனார்
('குடும்பவிளக்கு'   நூலில்)
===================================================================

பெண்ணுரிமை   பேண்!
===================
மறுக்காமல்    பெண்ணுரிமை   மாநிலத்தார்   தந்தால்
சறுக்காமல்   இவ்வையம்   செல்லும்  வெறுக்காமல்
பெண்ணினத்தைப்  போற்றிப்   புரந்திட்டால்   பொன்னுலகம்
கண்ணியமாய்   வாழும்   களித்து.  

- புலவர்   மு.  செல்வராசு,   திருச்சிதமிழ்நாடு
=============================================


No comments: