காதலர் தினம் - 2016
கவிதைகள்
தனித்து வாழ்ந்தது சோதனை
(கா)தலித்து வாழ்வதே சாதனை!
---------------------------------------------------
ஒருதலையாய்க் காதலித்து
இன்று
இருதலைக்கொள்ளி எறும்பாக ஆனாலும்,
என்றும் கடிக்காத காதலராய்
கல்யாணத்துக்குப் பின்னும்
வாழ்கிறோமே........
காதலிக்கு ஜே!
---------------------------------------------------------
அன்று
பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ்க என்றனர்
பெரியோர்,
இன்று,
பதினாலும் பெற்று
காதலோடு வாழ் என்கிறான்
சிறியோன்!
-----------------------------------------------------
கரையோரப் படகு
காதலர்களுக்குப் பாதுகாப்பாகுமா?
கயவர்களின் பார்வையில்
காதலைத் தொலைக்காதீர்கள்!
-
ராம்கோபால், மதுரை,
தமிழ்நாடு
============================
============================
உன்விழிப் பார்வையில் எரியும்என்னை
அணைப்பாயோ
அள்ளிப் பூசிக்கொள்வாயோ
காதலோடு!
-----------------------------------------------------------
எனக்காக வாழ்ந்த நாட்களைவிட,
உனக்காகக் காத்திருந்த
காலங்களேஅதிகம்!
-
பத்மாவதி கிருஷ்ணசாமி, நன்னிலம், தமிழ்நாடு
----------------------------------------------------------------------
========================================
காதலில் மூழ்கியவனின் கைப்பேசி
எப்போதும் திறப்பில்...
கடனில் மூழ்கியவனின் கைப்பேசி
எப்போதும் அணைப்பில்!
---------------------------------------------------------------------------
மேதினியில் மேன்மை பெறும்
மேம்பட்ட காதல் வளர,
சாதியென்னும் களைகள் நீக்கி,
சாகுபடி செய்வீர் அகம் மலர!
-
கவி வினோத்
குற்றாலம், தமிழ்நாடு
=================================
==================================
அழகைப் பார்த்து வந்தகாதல்
நிலைக்கவில்லை திருமணத்திற்குப் பின்,
அண்ணனுக் கு,
குணத்தைப் பார்த்துவந்த காதலை
கொண்டாடுகிறான் தம்பி
காதலர்தினத்தை,
பேரன் பேத்திகள் வந்தபின்னும்!
-
டி, கங்கை
கணேசன்,
மதுரை. தமிழ்நாடு
=====================================
=====================================
காதலர்களுக்குத் தேவை
ஒழுக்கம்!
ஒழுக்கத்தில் பிறப்பதே
உன்னதக் காதல்!
-
கே.எஸ்.சசிகுமார், விருதுநகர், தமிழ்நாடு
====================================
====================================
காதல் வெள்ளத்தில்
சிக்கிக்கொண்டேன்
தயவுசெய்து யாரும்
காப்பாற்ற வேண்டாம்
அவளைத் தவிர!
அவள் குறுந்தகவல் எனக்கு
உணவுப் பொட்டலம்
அவளது முகநூல் எனக்கு
தண்ணீர் பாட்டில்
அவளது பார்வை என்னைக்
கரை சேர்க்கும் படகு!
-
வீ.உதயகுமாரன். வீரன்வயல், தமிழ்நாடு
=================================
================================
ஆயுள்தண்டனையை மட்டுமே விரும்பி
இதயச் சிறையில் அடைபடும்
உண்மையான காதல்!
------------------------------------------------------------
என் இதயத்தில் தவழ்கிறது
உன் காதல்பார்வை1
என் இதயத்தைத் தழுவுகிறது
உன் காதல்புன்னகை!
--------------------------------------------------------------------
உன் பார்வை
காதல் க டிதம் எழுதியது.
உன் புன்னகை
காதலின் முகவரியை எழுதியது!
-------------------------------------------------------------------
வெறிச்சோடிக் கிடக்கும் மனசுகளை
நிரப்பித்தான் விடுகிறது
காதலைப்பற்றிய இன்பங்கள்,
அல்லது
துன்பங்கள்!
-முத்துஆனந்த், வேலூர், தமிழ்நாடு.
=================================
=================================
கரைமேல் எழுதப்பட்ட உன் பெயரை
எடுத்துச் சென்று
கடலின் அடியாழத்தில்
பத்திரப் படுத்திவிட்டுத்
திரும்புகிறது அலை!
-
பாடலாசிரியர் வசந்தராஜா, தமிழ்நாடு.
==================================
=================================
என் மனம் காதலின் சமாதி,
அதில் உன் நினைவுகள்
புன்னகை புரியும் ஜோதி!
=====================================
காதல் நினைவுகளை
முட்களால் சொறிந்தபடி
கடற்கரை மணலில்
புதைந்து கிடக்கிறது
மக்கிய படகொன்று!
=====================================
பூட்டிய என் நிசப்த பொழுதுகளைத்
திறக்கும் சாவி
உனது புன்னகை!
வளையல் சப்தம்!
கொலுசு சப்தம்!
-
வைரநகர் சிவாஜி, புஷ்பவனம்,
தமிழ்நாடு.
======================================
=====================================
கடற்கரை காதல்!
-
கூ.. ரா. அம்மாசியப்பன், சேலம்.
தமிழ்நாடு.
====================================
No comments:
Post a Comment