காதல் பொன்மொழிகள்
============================================================================
கண்ணீரோடு கலக்கும்போதுதான், காதலின் அழகு அதிகரிக்கிறது.
-
சர்வால்டர் சீகாட்
பெண்களை உயர்த்தி வைத்து,
அவர்களுக்கு சக்தியும் பலனும் அளிக்கும் காதல் ஏனோ ஆண்களை பலவீனப்படுத்திவிடுகிறது.
-
மாப்பஸான்
காதல் என்பது இளம் உள்ளத்தில் வீசும் தென்றல் ; அந்தக் காற்றுவீசும் காலத்தில் அறிவு, ஆணவம், தர்க்கம் ஆகியவற்றுக்கு
இடமில்லை.
-
புருனோ லெஸ்ரிங்
உண்மை, காதல் இவை இரண்டும்
உலகில் மிகப் பெரிய சக்திகள். இவை இரண்டும் ஒன்று சேர்ந்துவிடுமானால், அவற்றை எதிர்ப்பது கடினம்!
-
கட்வொர்த்
வாலிபர்களிடம் தோன்றும் காதலின் முதல் அறிகுறி.
கோழைத்தனம். பெண்களிடம் அந்த அறிகுறி துணிச்சல்.
இந்த கோழைத்தனமும், துணிச்சலும் ஒன்றையொன்று
நெருங்கும் தன்மையுடையன.
-
ரைஸ்டெவிங்
மற்றொருவரின் சுகத்தில் நம்முடைய சுகத்தை அர்ப்பணிப்பதே காதலிப்பதாகும்!
-
லீப்நிட்ஜ்
காதலிக்கும்போது, உனக்கு காதலைப்பற்றி எவ்வளவு குறைவாகத் தெரிகிறதோ, அவ்வளவிற்கு காதலில் இன்பம்!
-
நிக்காலியர்
இரு நபர்களை ஒருவருடத்தில் காதலிப்பது மகத்தான செயல் அல்ல.
இருபது வருடங்களாக ஒரே நபரைக் காதலித்து வாழ்வதுதான் மகத்தான
செயல்!
-
ஃப்ளாரன்ஸ் மாலி
=============================================================
No comments:
Post a Comment