தமிழகத்திலுள்ள குறுஞ்செய்தி ஊடகக்கவிஞர்களை ஒருங்கிணைத்து, ஓர் சந்திப்பு விழா நடத்தவேண்டுமென்ற என் குறிக்கோளின்படி,
செய்யாறு நண்பர் இராஜிவ்காந்தியின் ஆதரவுடன் நாங்கள் திருச்சியில் செப்.13, 2009 அன்று நிகழ்த்திய விழாவிற்கு, நண்பர் அமரர் கவிஞர் அ. கௌதமன் எங்களுக்கு அளித்த பேராதரவு மறக்கவியலாது.
சென்னையிலிருந்து குறுஞ்செய்தி ஊடகத்தின் முதல் படைப்பாளர் நண்பர் கன்னிக்கோவில் ராஜா அவர்களையும்,
அவரது நண்பர்களையும் வரவழைத்து, விழாவைச் சிறப்பித்த பெருமை, நண்பர் அ.கௌதமனையேச் சாரும்.
தொடர்ந்து, சேலம் மாநகரில் அக்டோபர் 9, 2011 அன்று கவிதாயினி திருமதி சுமதி அவர்கள் ஏற்பாடு செய்த குறுஞ்செய்திக் கவிஞர்களின் சந்திப்பிலும் கலந்துகொண்டு சிறப்பித்து,
இளங் கவிஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த கவிஞர் அ. கௌதமன் அவர்களுக்கு அனைவரும் நன்றியுடையவர்களாவோம்.
-
கிரிஜா
மணாளன்
சேலம்விழா மேடையில் திரு. கவிஞர் கௌதமன்.
கவிஞர் வழிநடப்போம்!
==========================
உரத்த சிந்தனையே
உயிர்மூச்சாம் அவருக்கு!
மறுத்துப்
பேசாத
மாண்புகொண்ட
பண்பாளர்!
சிரித்த
முகத்தோடு
சிந்தனையில்
தெளிவுடையார்!
நாளும்
தொடர்பினிலே
நம்மோடு
இருந்தவர்!
ஹைக்கூக் கதறுவது
காதில்
ஒலிக்கிறது!
கையறு
நிலைதனில்
களையிழந்து
நிற்கின்றோம்!
கண்ணீரைத் துடைத்து - அந்தக்
கவிஞனுக்கு அஞ்சலி செய்வோம்!
-
மழபாடி ராஜாராம், திருச்சி.
==========================
கைக்குள் வானம்போல்
ஹைக்குகளுக்கு வாசம்தந்த
நேசமிகு படைப்பாளி
கௌதமன்!
-
வீ. உதயகுமாரன், வீரன்வயல், தமிழ்நாடு
=====================================
கவிதையாகக் காத்திருக்கிறது
வார்த்தைகள்
மீண்டும் வருவாயோ பிறந்து?
-
அ.
கார்த்திகேயன்,
வெள்ளக்கோவில்,
தமிழ்நாடு.
======================================
அழவைத்துச் சென்றாரே
அழகுக் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்!
தொழவைத்துப் பிரிந்தாரே
தோழமையையும் உறவையும்!
பழகுதற்கு இனியவராயும்
பாசத்தின் பிறப்பிடமாயும்
அமைதியின் உருவாகவாழ்ந்து
அகத்தில் நிறுத்திவைத்தே
அஞ்சலி செலுத்திடுவோம்!
-
ஜமீலாபேகம். உதகமண்டலம், தமிழ்நாடு
=====================================
No comments:
Post a Comment