Monday, July 20, 2009
SMS இதழாசிரியர் அறிமுகம் - 1
இதழின் பெயர்: “ LINGAM SMS ”
இதழாசிரியர்: க. ராமலிங்கம், சிறுவந்தாடு, விழுப்புரம் மாவட்டம்.
அலைபேசி எண்கள் : 9940771501, 9976227703
மின்னஞ்சல் முகவரி: lingamsms@yahoo.com
தொடர்பு முகவரி:: கோமளா சில்க்ஸ், சிறுவந்தாடு,
விழுப்புரம் மாவட்டம் PIN : 605105.
இதழில் வெளியிடப்படுவது :
வாசகர்களின் கவிதைகள், ஹைக்கூ - திங்கள் முதல் வெள்ளி வரை.
குறுங்கதை - சனி, ஞாயிறு.
இதழின் தனிச்சிறப்பு : தமிழகத்தில் முதல் முதலாக எஸ்.எம்.எஸ்.(SMS) மூலமாக குறுங்கதை அனுப்புவதை அறிமுகம் செய்து, இதுவரை 24 கதைகளை அனுப்பியுள்ள இதழ்.
ஒரு குறுங்கதையில் 131 எழுத்துக்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், இதழின் Logo 18 எழுத்துக்கள், எழுத்தாளரின் பெயர் மற்றும் அலைபேசி எண் இவைகள் 11 எழுத்துக்கள், ஆக, மொத்தம் 160 எழுத்துக்களில் வெளியிடப்படுகிறது)
படைப்பாற்றல் மிக்க இவ்விதழின் ஆசிரியர் திரு. ராமலிங்கம், சிற்றிதழ்களில் இதுவரை 9 கவிதைகள், ஒரு சிறுகதை, 5 கட்டுரை இவைகளை எழுதி வாசகர்களுக்கு அறிமுகமானவர். மேலும் இணையதளத்தில், www.smskavignarkal-world.blogspot.com கவிதைத் தளத்தில் (தளத்தின் ஆசிரியர்: கிரிஜா மணாளன்) 3 சிறப்பான கவிதைகளை வழங்கி, உலகளாவிய வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
நண்பர் ராமலிங்கம் அவர்களின் இப்பணி மேன்மேலும் சிறப்புற நிகழ்ந்து, அவர் மூலம் நமது தமிழுலகத்துக்கு புதிய படைப்பாளர்களின் வருகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புடன், அவருக்கும், இப்பணியில் அவரை ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
கிரிஜா மணாளன்
(Editor: www.smspoets-tamil.blogspot.com)
மற்றும்.....
www.smskavignarkal-world.blogspot.com
www.tiruchikavignarkal.tamilblogs.com
www.kavithaigal.tamilblogs.com
www.girijamanaalan-humour.blogspot.com
www.girijanandha-humour.blogspot.com
www.humour-garden.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
nice
தாங்கள் எடுக்கும் முயற்சிகள்
வெற்றிபெற என் வாழ்த்துகள்
கவிஞர்வாலிதாசன்
முகவை-1
Post a Comment