Thursday, July 11, 2019
Tuesday, July 9, 2019
Sunday, June 23, 2019
நூலகம்
மனப் புழுக்கத்தை
மாற்றும் பூக்காடு
இந்தப் புத்தகக் காடு!
காய சண்டிகையாய்
மூளைக்குப் பசிக்கும்போது
நூலகம்தான் அமுதசுரபி!
தனிமையிலே இனிமை காண
முடியும் என்பதின்
முக்கியச் சாட்சி!
இது ஒரு
கான்கிரீட் தேன்கூடு!
அடுக்கி வைத்துள்ளவை
புத்தகங்கள் அல்ல,
ஞானிகள் நமக்களித்த
பொக்கிஷங்கள்!
வாசகனுடைய
நேசக்கரங்களில்
உட்காரும்போதுதான்
உயிர் பெறுகிறது!
நூலகம்...
அழுக்கு நினைவுகளை
அகற்றித் துவைக்கும்
சலவைத் துறையோ?
சூன்ய நெஞ்சுக்குச்
சுடரொளியோ?
(தஞ்சை தாமு)
கைப்பேசி : 75987 75652-
Tuesday, August 23, 2016
Saturday, August 20, 2016
Subscribe to:
Posts (Atom)











