Thursday, February 24, 2011



தலைகுனிந்தே.......
==================

நிமிர்ந்து நடக்க ஆசைப்பட்டும்,
முடியவில்லை.......மனிதர்கள்
உமிழ்ந்துவிட்டுப் போகும்
எச்சில்களும்
மிருகங்களின் கழிவுகளினாலும்
தலைகுனிந்தே நடக்கிறேன் நான்...
பாரதியின் சொல்லை
சற்றே மறந்து!

- எஸ். சுமதி, சேலம்
(தமிழ்நாடு)

Sunday, February 20, 2011

காதல் ஓவியம் -------------

காதல் ஓவியம்
-------------

தூரிகையின்றி வரைந்தோம்
நம் கண்களால்,
முழுமை அடைந்தது
காதல் ஓவியம்.

- எஸ். சுமதி, சேலம்
(தமிழ்நாடு)

Monday, February 14, 2011

கன்னக்குழி!


கன்னக்குழி!
சிட்டிகை அளவு
மண்கொண்டு நிரப்பிவிடும்
சின்னக்குழிகள் என்றாலும்,
சட்’டென விழவைத்துவிட்டது என்னை
உன் கன்னக்குழி!

- தனபால், ராசிபுரம் (தமிழ்நாடு)

Wednesday, February 9, 2011

நம்பிக்கை!


நம்பிக்கை!

தவமியற்றுகின்றன
சிப்பிகளுக்குள் உயிர்கள்
முத்தாகும் நம்பிக்கையில்.

- மீனாதேவி, நாகர்கோவில்
(தமிழ்நாடு)

திருட்டு!


திருட்டு!

இமைப்பொழுதில் என்
இதயம் திருடியவளே! - நான்
இமைக்காது பார்க்கையில்
எப்படி திருடினாய்?

- முத்து விஜயன், கல்பாக்கம்.
(தமிழ்நாடு)

மழை!

முப்போகம் விளைய உதவிய
முதலாளியாய் அன்று....
கான்கிரீட் வீடுகளை
கழுவிச் சுத்தப்படுத்தும்
சேவகனாய் இன்று!

- க. இளையராஜா, சாத்துக்கூடல், (தமிழ்நாடு)

இதழ்கள்!

இதழ்கள்!

நுரைத்துப் பொங்கும் பாலை
உதடு குவித்து ஊதி
உஷ்ணம் குறைத்து
தேனீர் சமைத்து பகிர்ந்தாய்.
உன் இதழ்கள் சுவைத்த
திருப்தி எனக்கு!
- சாரா (சரவணன்) சென்னை-99
(தமிழ்நாடு)